Samstag, 19. November 2011

மனிதநேயத்தின் மறுபிறவி தோழர் க.பத்மநாபாஅவனியில் அவதரித்து அறுபது ஆண்டுகள் 19.11.1951--19.11.2011


மக்களின் அவலம் கண்டு-தன்
மடியிலிருந்து தந்தாள்-மக்களுக்காக
மாசற்ற மாணிக்கம் தனை-அவர்தான்
மரணத்தை வென்ற மகாத்மா
மனிதநேயம் கொண்ட தோழன் எங்கள் நாபா

மகிமை எண்ணம் என்றும்
மலர்ந்த முகம் யாருக்கு வரும்
மனிட உலகத்தில் அவர்தான்
மரணத்தை வென்ற மகாத்மா
மனிதநேயம் கொண்ட தோழன் எங்கள் நாபா

மலர்ச்சி இழந்த மக்களின்
மகிழ்ச்சி முகம் காண அன்று
மாணவ பருவத்தில் சுடு மணலில் விளையாடியவர்
மஞ்சம் சுகவாசம் துறந்தவர் அவர்தான்
மரணத்தை வென்ற மகாத்மா
மனிதநேயம் கொண்ட தோழன் எங்கள் நாபா

மக்களில்லாத மண்ணை நேசிக்கவில்லை-நாம்
மக்களுக்காகவே மண்ணை நேசிக்கின்றோம்
மா-காவியமான இவ்புரட்சிவசனம்
மனதை சிந்திக்க வைத்து
மக்களின் மானம்காத்தவர் அவர்தான்
மரணத்தை வென்ற மகாத்மா
மனிதநேயம் கொண்ட தோழன் எங்கள் நாபா

மரணத்தை பலமுறை கண்டு சிரித்து
மணவாளன் போல் மக்கள் மத்தியில்
மலைசூடி புன்னைகையில் வீரம் சுமந்து
மதியூகத்திற்க்கு சொந்தகாரன்அவர்தான்
மரணத்தை வென்ற மகாத்மா
மனிதநேயம் கொண்ட தோழன் எங்கள் நாபா

மந்திரம் தந்திரம் அறியாது-தமிழ்
மக்களின் இன்னல்களை மட்டும்
மனதில் சுமந்து நடமாடிய மகாத்மாஅவர்தான்
மரணத்தை வென்ற மகாத்மா
மனிதநேயம் கொண்ட தோழன் எங்கள் நாபா

மதிப்புரை என்றென்றும் உங்களுக்கு மட்டும்
மதிப்பீடும் என்றென்றும் உங்களுக்கு மட்டும்
மதிப்பெண்ணும் என்றென்றும் உங்களுக்கு மட்டும்
மயிலாடும் புன்னகையுடன் என்றென்றும் உங்களுக்கு மட்டும்
மனம் காத்த பெருமையும் உங்களுக்கு மட்டும்

மனிதநேயம் கொண்ட எங்கள் தோழனே
மன்னனே நீங்கள் என்றும்எங்களுக்கு மட்டும்
மண்ணில் வாழ்க உங்கள் புகழ்
மக்கள் மத்தியில் தொடர்வோம் உங்கள் பணி


அனைத்து தியாகிகளுக்கும் பொது மக்களுக்கும் எமது அஞ்சலிகள்
தோழமையுடன் வவிதரன்