Mittwoch, 19. November 2014


     புனிதமகாத்மாவே                                                          எங்கள் தோழனே....

புனித மண்ணில் -உதிர்த்த
புனித மகாத்மா-தன்
புகழ்தேடா  மக்கள்
புகழ காக்க புறப்பட்டு
புவியில் வலம் வந்த எங்கள் 
புனிதமகாத்மாவே தோழனே உங்கள் வயது 63

புதுயுகம் படைத்து
புரட்சி பாதையிலே பயணித்து
புன்னகையுடன் மக்களின் முன்னே
புவியில் வலம் வந்த எங்கள் 
புனிதமகாத்மாவே தோழனே உங்கள் வயது 63

புருவங்களில்..எங்கள் புருவங்களில்
புத்துணர்ச்சி செறித்தோங்க
புவியில் எழுச்சி வழிகாட்டி
புவியில் வலம் வந்த எங்கள் 
புனிதமகாத்மாவே தோழனே உங்கள் வயது 63

புத்திசாலிகள் ஆயிரம் நம்ஈழ மண்ணில்
புனிதமான  மக்கள் பக்தி கொண்டு
புதிய சரித்திரம் அடைந்திட
புவியில் வலம் வந்த எங்கள் 
புனிதமகாத்மாவே தோழனே உங்கள் வயது 63

புலம்பிடும் மக்களுக்காக
புவியீர்ப்பு சக்தி அறியாத சில
புல்லுருவிகள் தோழ்மீதும் தன்கரம் பதித்து
புவியில் வலம் வந்த எங்கள் 
புனிதமகாத்மாவே தோழனே உங்கள் வயது 63

புனிதனே உனை தோழன் என நாம் அடைய
புண்ணயம் நாம் அடைந்தோம் தோழா
புகழ்மாலைகள்  என்றும் புன்கைமாலைகளாக
புரட்சியாளனே உன் தோழ்களில்.. 

வாழீ உங்கள் நபா நாமம் வாழீ

உங்களின் புரட்சி நினைவுகளுடன் தோழர்கள்

Mittwoch, 18. Juni 2014

தோழர் நாபா இவ் உலகில் நல் திசைகாட்டி

உன் தெளிந்த புன்னகை தேடி
உன்னிடம் வந்தவர் கோடி-தோழா
உன் நற்சிந்தனை கண்டு
உலகில் பலமுகம் வாடி நின்றது -தோழா 
...
உரிமை  குரல் எழுப்பி- நல் 
உச்சரிப்புகள் தாங்கி நின்றவரே  தோழா
உங்கள்  இனத்துக்காக  புறப்பட்டு
உருமாறிய தீயவர்க்கு  உன்பொன்-
உடல் கொடுத்தவரே எங்கள் தோழா
....
உண்மைகளை உண்மை என்று-  பூமியில்
உதித்த நற்கருத்துகள் தந்தவரே தோழா
உதிரம் தோய்ந்த கரங்களைவிட்டு
உன்னதமான பணிகளை தொடர்ந்த தோழா
....
உத்தமன் நீங்கள் என்றும்
உலகத்தார் பறைசார்றினரே தோழா
உணர்வுகள் பொங்க உரிமை பேச்சுக்கள்
உணர்தியவரே எங்கள் தோழா
.....
உவமானம் நீயென்று உன்மக்கள்
உதடு சிவக்க அன்றும் என்றும்
உரைத்தனரே எங்கள் தோழா
உலகில் மறுபடியும் மலர்ந்து வா எங்கள் தோழா
....
உபயோகம் பெற்ற பலர்-உனை
உதறிதள்ளிபோன வரலாறும் உண்டு தோழா
உவமேயமாய் நீங்களிருக்க
உங்கள் தோழர் எமக்கென்ன துயரம் தோழா
.....
உங்கள் வரவுக்காக காத்திருக்கும் 
உங்கள் உயிரானவர்கள் நாங்கள் தோழா
உங்கள் மடியிலிருந்து மறுமடியும்
உறுதியான அரசியல் பயில-எங்கள்
உள்ளத்தினுள் பன்மடங்கு ஆவல் தோழா
....
உயிர் மெய்யெழுத்து அரசியலில் 
உண்மையாய்அடியெடுத்து தந்தவர் நீங்கள் தோழா
உரக்க சொல்கிறோம் ஒரு முறையாவது
உத்தம  பூமியில் அவதாரமாய் வாருங்கள் தோழா

நாம் மக்களில்லாத மண்ணை நேசிக்கவில்லை
மக்களுக்காவே மண்ணை நேசிக்கின்றோம்
---தோழர் க.பத்மநாபா---

புரட்சி வேட்கை தோழமையுடன்
---தோழர் வவி--