Mittwoch, 18. Juni 2014

தோழர் நாபா இவ் உலகில் நல் திசைகாட்டி

உன் தெளிந்த புன்னகை தேடி
உன்னிடம் வந்தவர் கோடி-தோழா
உன் நற்சிந்தனை கண்டு
உலகில் பலமுகம் வாடி நின்றது -தோழா 
...
உரிமை  குரல் எழுப்பி- நல் 
உச்சரிப்புகள் தாங்கி நின்றவரே  தோழா
உங்கள்  இனத்துக்காக  புறப்பட்டு
உருமாறிய தீயவர்க்கு  உன்பொன்-
உடல் கொடுத்தவரே எங்கள் தோழா
....
உண்மைகளை உண்மை என்று-  பூமியில்
உதித்த நற்கருத்துகள் தந்தவரே தோழா
உதிரம் தோய்ந்த கரங்களைவிட்டு
உன்னதமான பணிகளை தொடர்ந்த தோழா
....
உத்தமன் நீங்கள் என்றும்
உலகத்தார் பறைசார்றினரே தோழா
உணர்வுகள் பொங்க உரிமை பேச்சுக்கள்
உணர்தியவரே எங்கள் தோழா
.....
உவமானம் நீயென்று உன்மக்கள்
உதடு சிவக்க அன்றும் என்றும்
உரைத்தனரே எங்கள் தோழா
உலகில் மறுபடியும் மலர்ந்து வா எங்கள் தோழா
....
உபயோகம் பெற்ற பலர்-உனை
உதறிதள்ளிபோன வரலாறும் உண்டு தோழா
உவமேயமாய் நீங்களிருக்க
உங்கள் தோழர் எமக்கென்ன துயரம் தோழா
.....
உங்கள் வரவுக்காக காத்திருக்கும் 
உங்கள் உயிரானவர்கள் நாங்கள் தோழா
உங்கள் மடியிலிருந்து மறுமடியும்
உறுதியான அரசியல் பயில-எங்கள்
உள்ளத்தினுள் பன்மடங்கு ஆவல் தோழா
....
உயிர் மெய்யெழுத்து அரசியலில் 
உண்மையாய்அடியெடுத்து தந்தவர் நீங்கள் தோழா
உரக்க சொல்கிறோம் ஒரு முறையாவது
உத்தம  பூமியில் அவதாரமாய் வாருங்கள் தோழா

நாம் மக்களில்லாத மண்ணை நேசிக்கவில்லை
மக்களுக்காவே மண்ணை நேசிக்கின்றோம்
---தோழர் க.பத்மநாபா---

புரட்சி வேட்கை தோழமையுடன்
---தோழர் வவி--








Montag, 18. November 2013

மனிதநேயத்தின்  மறு பிறவி  தோழர் 

க.பத்மநாபா 

உங்கள் வயது இன்று 62....


19.11.1951--19.11.2013

புதியபாதை வகுத்து தந்த
புண்ணிய சீலன் அவர்
புன்னகைக்கு நீங்கள் தான் தோழா
புவியில் ஓர் அரசனாக
புனிதத்திற்கு புத்துயிர் தந்தவர் எங்கள் தோழரே
உங்கள் வயது இன்று 62....

புத்திமானின் ஒருவராக புவியில்
புகழ் சுமந்து வலம் வந்த எங்கள் தோழன்
புரிந்தவர்களுக்கு புதிர் இல்லாமல்
புனிதத்திற்கு புத்துயிர் தந்தவர் எங்கள் தோழரே
உங்கள் வயது இன்று 62....

புகல்லிடம் தேடிவந்த தோழர்களை--அரசியல்
புத்திசாலியாக்கிய பெருமைகுரியவர்
புண்ணியவதி உங்கள் தாய்--நாங்கள்
புண்ணியம் செய்துள்ளோம் புனிதரே
புனிதத்திற்கு புத்துயிர் தந்தவர் எங்கள் தோழரே
உங்கள் வயது இன்று 62....
புன்னகை முகத்துடன் அரசியல் தாகம் தந்து 
புதிதாக மண்ணில் பிறக்க வைத்து
புகழ் வேண்டா தன்னம்பிக்கை கொண்டு
புவிதனில் வலம் வந்து தோழர்களின்
புனிதத்திற்கு புத்துயிர் தந்தவர் எங்கள் தோழரே
உங்கள் வயது இன்று 62....

புதுயுகம் ஒன்றை படைத்து
புழுதியில் வாடும் மக்களிடம் ஒப்படைக்க
புரட்சிவீரனாக தோழர்கள் மத்தியில்
புதுமை மைந்தனாக புறப்பட்டு
புனிதத்திற்கு புத்துயிர் தந்தவர் எங்கள் தோழரே
உங்கள் வயது இன்று 62....

புலவர்கள் விளைந்த இந்திய மண்ணில்
புகழ்ச்சியும் வளர்ச்சியும் கண்டு பொறுக்காத
புழுக்களாம் தந்திர பாசிசம்
புனிதத்தின் நாயகனை அன்று
புழுதி மண்ணில் சாயத்தனரோ....தோழரே

புவியும் கலங்கிநின்றது மலர்களும்
புன்னகை தர மறுத்தது அன்று
புல்லுருவிகளின் செயல்களினால்
புவிதனில் மக்களின் கண்ணீர் வெள்ளமாக
புதிதாக ஒர் ஆறு கடலை நோக்கி ஓடியது...தோழரே
.......

புரட்சிவேட்கை...தோழமையுடன்
உங்கள் தோழர்கள்


Dienstag, 20. November 2012



இந்தியாவின் மருமகனே ஈழத்து காந்தியே தோழர் நாபாவே உங்கள் வயது இன்று 61... (19.11.1951..19.11.2012)
மக்களை நேசித்த மாமனிதன் தோழர் க.பத்மநாபா

தன் இனத்தின் நல் விடியலுக்காக
தரணிதனில் கால் பதித்த எங்கள் தோழர் இவர்
தன் நலம் இல்லாது அன்று மக்களுக்காக
தயக்கமின்றி கால்பதித்து பயணம் தொடர்ந்த எங்கள் தோழரே
உங்கள் வயது இன்று 61... 
.... தளர் நடை துளர் இன்றி இலட்சிய பாதைநோக்கி
தன் இனம் காக்க புறப்பட்ட எங்கள் தோழர் இவர்
தன்னிறைவு எமக்கெல்லாம் வேண்டும் என்று- நற்
தன்மை அரசியல் தந்த எங்கள் தோழரே
உங்கள் வயது இன்று 61...
 

....
தற்புகழ்ச்சி பேசாது எங்கள் மக்களின்-நற்
தற்பெருமை தந்த எங்கள் தோழர் இவர்
தற்குறி பண்புகொண்டோரையும் அன்று
தஞ்சம் தந்து தளபதிகளாக்கிய எங்கள் தோழரே
உங்கள் வயது இன்று 61... 

...
தடுமாற்றமில்லாத வினாக்களுக்கு விடைகள் சுமந்து
தமிழ்பேசும் மக்கள்முன்தந்த எங்கள் தோழர் இவர்
தாயின் கருவறையிலும் தங்கியிருந்தபோதும்
தமிழிரின் சொர்பனம் என்னவென்று அறிந்த எங்கள் தோழரே
உங்கள் வயது இன்று 61...
....
 தயக்கம் தந்த ஐயமின்றி பொதுநலத்தை அன்று
தணிக்கை இன்றி தந்த எங்கள் தோழர் இவர்
தன் கடமை என்னவென்று பாசறையில் அன்று
தன்னடக்கத்துடன் போதித்த எங்கள் தோழரே
உங்கள் வயது இன்று 61...
....
 தளர்ச்சி இன்றி உன்மக்களுக்காக உன்மேனியில்
தளும்புகள் ஆயிரம் தாங்கிய எங்கள் தோழர் இவர்
தார்மிக பொறுப்புக்கள் நமக்கே என்று-அதிக சுமைகளை
தலை வணங்கி ஏற்றுக்கொண்ட எங்கள் தோழரே
உங்கள் வயது இன்று 61...
....
 தலைமுறைகள் வாழ உங்கள் மதிப்பில்லா
தன்னுயிர் தனை தந்த எங்கள் தோழர் இவர்
தட்சனையின்றி உங்கள் நன்நீர்அரசியலை நமக்கு
தலைக்கவசமாக தந்த எங்கள் தோழரே
உங்கள் வயது இன்று 61...
...
 தரம் கொட்ட மனிதர்களால் நீங்கள்
தரைதனில் புதைக்கப்பட்டாலும்
தரமுள்ள மனிதர்கள் யாரென்று
தர்மம் தெரிந்த மானிடர்கள்
தவறை உணர்ந்து அழும் காலம் இப்போ தோழா.
தகமையுள்ளவர்கள் நாமே.....
தழைத்து வா தோழா. தழைத்து வா தோழா-நற்
தமிழருக்காக தடைகளை தாண்டி பயணிப்போம்
...
மக்களில்லாத மண்ணைநேசிக்கவில்லை நாம் மக்களுக்காக மண்ணைநேசிக்கின்றோம்
க.பத்மநாபா

--தோழமையுடன் வவிதரன்--