Samstag, 18. Juni 2016

புதுயுகம் காண புறப்பட்ட எங்கள் மனித நேயனே......

புகழ்ச்சி தனை விரும்பாத 
புருவம் கொண்ட எங்கள் தோழனே
புனிதமான எங்கள் மக்களுக்காக
புன்னகை கொண்ட அகத்துடன்
புதுயுகம் காண புறப்பட எங்கள் மனித நேயனே.

புவியீர்ப்பு அறிந்த புருசர்கள் எல்லாம் 
புண்ணியம் செய்தனர் உனை பெற
புவிக்கு நீங்கள் ஒருவராய் -மக்கள் 
புதல்வர்களில் நீங்கள் முதல்வராய்
புதுயுகம் காண புறப்பட எங்கள் மனித நேயனே.

புத்திசாலிகள் உன் வசம் 
புலமை கொண்டோர் பாடுவர் உன் நிஐம்
புவியியல் அறிந்த மானிடர் அறிவியலாய் 
புலம்புவர் மக்கள் வசம்
புதுயுகம் காண புறப்பட எங்கள் மனித நேயனே.

புன்னகை தெளிந்த முகத்துடன்
புரட்சி எழுர்ச்சி கொண்டு மக்கள் வசம்
புதிர் இன்றி எடுத்துரைத்தாய் 
புதுமுகங்ளையும் மலரவைத்தாய்
புதுயுகம் காண புறப்பட எங்கள் மனித நேயனே.

புரியாத மனிதருக்கும்--அரசியல்
புரியாத மனிதருக்கும் 
புதினம்மின்றி புரியவைத்தாய்
புதைகுழிகள் சகோதர புதைகுழிகள் தேவையில்லை என்று
புன்சிரிப்புடன் சகோதரர்கு எடுத்துரைத்தாய்
புதுயுகம் காண புறப்பட எங்கள் மனித நேயனே.

புத்திரன்களை இழந்த எங்கள்
புலத்தில் புலம்பிடும் தாய்களுக்கும்--சீரான
புதியபாதை வகுத்து 
புத்துணர்ச்சி தந்தவரே 
புதுயுகம் காண புறப்பட எங்கள் மனித நேயனே.

புத்திமான்கள் கூறாத கூற்றுதனை அரசில்
புரியாத கூட்டத்திற்க்கு
புரியவைத்த எங்கள்  புதுமை பித்தனே
புதுயுகம் காண புறப்பட எங்கள் மனித நேயனே.

புத்தகம்  எனும் அரசியல் புதையல் தனை
புரணமாய் எடுத்ரைக்க நாங்கள் என்றும்
புத்துயிர் கொண்டு புறப்படுவோம்
புண்ணியவதி ஈன்றெடுத்த 
புல்லறிவாளனே  எம்முடனே -என்றும்
புதுமை படைத்திடுவோம்  
புதுமை படைத்திடுவோம்  
புயல்  என புறப்பட்டு வா........
புதுயுகம் காண புறப்பட எங்கள் மனித நேயனே.

 உங்களின்  வரவுக்காக என்றும் காத்திருக்கும் தோழர்கள் 

Keine Kommentare:

Kommentar veröffentlichen