பாசிசப் புலிகள் புரிந்த கந்தன் கருணை படுகொலை
30.03.1987...30.03.2011
கடமை தனை நெஞ்சில் சுமந்து
கர்மம் தனை வெல்வோம் என்று
களம் இறங்கிய தோழர்களை
கண்மணிகளை எங்கள் பொன்மணிகளை
கண் இமைக்குமுன் கயவர்கள்
சகோதரபடுகொலை புரிந்த நாள் இன்று
................
கண்ணீர் விடும் மக்களுக்காக
கவரிமான்களாய் அன்று
களம் நோக்கி புறப்பட்டு
காவியங்களாக பிரசன்னமாகவேண்டிய
கண்மணிகளை எங்கள் பொன்மணிகளை
கண் இமைக்குமுன் கயவர்கள்
சகோதரபடுகொலை புரிந்த நாள் இன்று
..................
காளையர்களாய் இருந்த இவர்கள்
கர்மவீரர்கள் போல் வலம் வந்து
கனிமொழி பேசிய தோழர்கள்
கச்சைகட்டி வேட்கையுடன் புறப்பட்ட
கண்மணிகளை எங்கள்பொன்மணிகளை
கண் இமைக்குமுன் கயவர்கள்
சகோதரபடுகொலை புரிந்த நாள் இன்று
..................
காதல் பரிவு பாசம் அனைத்தும் துறந்து
கடைசிவரை மக்கள் தொண்டே ஒன்றை
கடைப்பிடித்து வாழ்ந்த நம்
கண்களில் கடவுளாக காட்சிதந்த
கண்மணிகளை எங்கள் பொன்மணிகளை
கண் இமைக்குமுன் கயவர்கள்
சகோதரபடுகொலை புரிந்த நாள் இன்று
................
கனிந்து வருகிறது உங்கள்
கனவு பலிக்கும் நாள்
கயவர்கள் இப்போ இல்லை
கண்விழித்து வாருங்கள்
கடமை வெல்வோம் கடமை வெல்வோம்
தோழர்களே தோழர்களே..
தோழமையுடன் பாவரசன்