Freitag, 18. November 2016



அறிவுடைய நம்பி எங்கள் தோழன்
அவனியில் அவதரித்த நாள் இன்று.........



அகிம்சைக்கு என்றும்
அத்திவார தாங்கியாக
அமைந்த அறிவின் சிகரம்
அன்பின் தோழமையின் மைந்தன்
அண்ணல் மகாத்மாதோழர் பத்பநாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று


அரவணைக்கும் கரங்களுடன்
அதிசயமனிதனாக - உலகில் 
அன்பை சுமந்து வலம் வந்த
அவதாரம் எங்கள் தோழன் நாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று


அரக்க குணம் படைத்துதோரையும்
அணைத்து முத்தமிட்டு
அறிவியல் கதைசொல்லும்
அத்திமலர்போல் எங்கள் தோழன் நாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று


அற்புத மனிதனாக மக்களிடம் இருந்து
அச்சத்தைவிரட்டியடித்து--மனங்களில் 
அதிவீரத்தை தந்த புருசனவன்
அகராதியில் முதல் வார்த்தையாக
அமைந்த எங்கள் தோழன் நாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று


அசுரகுணம் படைத்தோரின் - வஞ்சகத்தின்
அதிசய துப்பாக்கிக்கு - அன்று
அப்பாவியாக இன்னுயிர் நீத்த
அருமை தோழனவன் என்றும்
அறம் பொருள் இன்பம் - இவை
அனைத்திற்கும் மறுநாமம்
அகிலத்தில் தோன்றிய தோழன் நாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று


அன்னை மடி(இந்தியா) பாசத்தின்
அணைப்பின்றி வராது ஓர்தீர்வு என்று
அறைகூவலுடன் கூறிய
அறிவுடைய நம்பி எங்கள் தோழன்
அவனியில் அவதரித்த நாள் இன்று


அல்லும் பகலும் மக்களை சுமந்து
அடிமை விலங்கினை உடைப்போம் என்று
அமர்ந்திருந்து ஆயிரமாயிரம் யுக்திகள் வகுத்து
அதீவீர பாண்டியனாக எங்கள் தோழன்
அவனியில் அவதரித்த நாள் இன்று


அணிவகுத்து நின்ற தோழர்களின்
அகத்தில் நல்ஆசானாகஅள்ளித்தந்த
அரசியல் வார்த்தைகளினால்
அரும்பெரும் வடிவம் தந்த
அதிஉன்னதமான தோழன் எங்கள் நாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று


அமைதியாக நடைபோட்டு அன்னை மண்ணில்
ஆற்றிய தொண்டுகள்அத்தனைக்கும் 
அதாரமாய் மக்கள் மனதில்
அன்பைமட்டும்போதித்து அழியாத இடம்பிடித்து
அகிலம் போற்றும் எங்கள் தோழன்
அண்ணல் மாகாத்மா பத்மநாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று


அரக்கன் இப்போ இல்லை தோழா
அதிசயம் ஆனால் இதுஉண்மை தோழா
அவமான சின்னம்அவன் பாசிசம் தோழா

அதிகாரம் எங்களுக்கு வேணாம் தோழா
அமைதிபோராட்டம் செய்வோம் தோழா
அருகே எங்கள் பக்கம் வாருங்கள் தோழா
அனைவரும் அவர்நாமம் சிந்தனை செய்வோம்