Samstag, 18. November 2017


தோழர் அமரர் க. பத்மநாபா பிறந்த தினம்


ன் இனத்தின் நல் விடியலுக்காக
தரணிதனில் கால் பதித்த எங்கள் தோழர் இவர்
தன் நலம் இல்லாது அன்று மக்களுக்காக
தயக்கமின்றி கால்பதித்து பயணம் தொடர்ந்த எங்கள் தோழரே
உங்கள் வயது  66... 

.... தளர் நடை துளர் இன்றி இலட்சிய பாதைநோக்கி
தன் இனம் காக்க புறப்பட்ட எங்கள் தோழர் இவர்
தன்னிறைவு எமக்கெல்லாம் வேண்டும் என்று- நற்
தன்மை அரசியல் தந்த எங்கள் தோழரே
உங்கள் வயது 66...
 


தற்புகழ்ச்சி பேசாது எங்கள் மக்களின்-நற்
தற்பெருமை தந்த எங்கள் தோழர் இவர்
தற்குறி பண்புகொண்டோரையும் அன்று
தஞ்சம் தந்து தளபதிகளாக்கிய எங்கள் தோழரே
உங்கள் வயது இன்று 66... 


தடுமாற்றமில்லாத வினாக்களுக்கு விடைகள் சுமந்து
தமிழ்பேசும் மக்கள்முன்தந்த எங்கள் தோழர் இவர்
தாயின் கருவறையிலும் தங்கியிருந்தபோதும்
தமிழிரின் சொர்பனம் என்னவென்று அறிந்த எங்கள் தோழரே
உங்கள் வயது  66...


 தயக்கம் தந்த ஐயமின்றி பொதுநலத்தை அன்று
தணிக்கை இன்றி தந்த எங்கள் தோழர் இவர்
தன் கடமை என்னவென்று பாசறையில் அன்று
தன்னடக்கத்துடன் போதித்த எங்கள் தோழரே
உங்கள் வயது  66...


 தளர்ச்சி இன்றி உன்மக்களுக்காக உன்மேனியில்
தளும்புகள் ஆயிரம் தாங்கிய எங்கள் தோழர் இவர்
தார்மிக பொறுப்புக்கள் நமக்கே என்று-அதிக சுமைகளை
தலை வணங்கி ஏற்றுக்கொண்ட எங்கள் தோழரே
உங்கள் வயது இன்று 66...


 தலைமுறைகள் வாழ உங்கள் மதிப்பில்லா
தன்னுயிர் தனை தந்த எங்கள் தோழர் இவர்
தட்சனையின்றி உங்கள் நன்நீர்அரசியலை நமக்கு
தலைக்கவசமாக தந்த எங்கள் தோழரே
உங்கள் வயது இன்று 66...



 தரம் கொட்ட மனிதர்களால் நீங்கள்
தரைதனில் புதைக்கப்பட்டாலும்
தரமுள்ள மனிதர்கள் யாரென்று
தர்மம் தெரிந்த மானிடர்கள்
தவறை உணர்ந்து அழும் காலம் இப்போ தோழா.
தகமையுள்ளவர்கள் நாமே.....
தழைத்து வா தோழா. தழைத்து வா தோழா-நற்
தமிழருக்காக தடைகளை தாண்டி பயணிப்போம்
...