துப்பாக்கி வேட்டுக்களின் சத்தங்களை துரத்திவிட்டு மக்கள் சக்திதனை கட்டியணைத்த எங்கள் தோழன் க.பத்மநாபா!!!!!
Mittwoch, 19. November 2014
புனிதமகாத்மாவே எங்கள் தோழனே....
புனித மண்ணில் -உதிர்த்த
புனித மகாத்மா-தன்
புகழ்தேடா மக்கள்
புகழ காக்க புறப்பட்டு
புவியில் வலம் வந்த எங்கள்
புனிதமகாத்மாவே தோழனே உங்கள் வயது 63
புதுயுகம் படைத்து
புரட்சி பாதையிலே பயணித்து
புன்னகையுடன் மக்களின் முன்னே
புவியில் வலம் வந்த எங்கள்
புனிதமகாத்மாவே தோழனே உங்கள் வயது 63
புருவங்களில்..எங்கள் புருவங்களில்
புத்துணர்ச்சி செறித்தோங்க
புவியில் எழுச்சி வழிகாட்டி
புவியில் வலம் வந்த எங்கள்
புனிதமகாத்மாவே தோழனே உங்கள் வயது 63
புத்திசாலிகள் ஆயிரம் நம்ஈழ மண்ணில்
புனிதமான மக்கள் பக்தி கொண்டு
புதிய சரித்திரம் அடைந்திட
புவியில் வலம் வந்த எங்கள்
புனிதமகாத்மாவே தோழனே உங்கள் வயது 63
புலம்பிடும் மக்களுக்காக
புவியீர்ப்பு சக்தி அறியாத சில
புல்லுருவிகள் தோழ்மீதும் தன்கரம் பதித்து
புவியில் வலம் வந்த எங்கள்
புனிதமகாத்மாவே தோழனே உங்கள் வயது 63
புனிதனே உனை தோழன் என நாம் அடைய
புண்ணயம் நாம் அடைந்தோம் தோழா
புகழ்மாலைகள் என்றும் புன்கைமாலைகளாக
புரட்சியாளனே உன் தோழ்களில்..
வாழீ உங்கள் நபா நாமம் வாழீ
உங்களின் புரட்சி நினைவுகளுடன் தோழர்கள்
Abonnieren
Posts (Atom)