எங்கள் தோழர்களின் ஆத்மா சாந்திக்காக...
கந்தன் கருணைபடுகொலை எங்கள்
கண்மணிகளை கருக்கிய படுகொலை
காட்டு மிராண்டித்தனமான படுகொலை
கருணை இல்லாத பாசிச புலிகளால்
கண்ணீர்சிந்தவைத்த படுகொலை
காவிய நாயகர்களின் கைகளை
கட்டிவிட்டு புலிகள்கர்வம் காட்டிய படுகொலை
கண்ணில் இருந்து மறையுமா இந்த
காலச் சுவடுகள் பாசிச தலைவா?
காலங்கள் உங்களுக்கு மட்டும்சொந்தமல்ல
கனிவான எங்கள் அரசியலை
கண்சிமிட்டாமல் சிறிது வேளை
கனிவுடன் உற்று நோக்கு
கண்ணீர் சிந்தும் மக்கள் யார் பக்கம்
கடவுள் பெயராலே அன்று
கண்ணீர் சிந்த வைத்தவர்கள் இன்று
கட்டிய கோமணமும் இழந்த நிலையில்
கடவுள் தீர்ப்பை பாத்தீரோ
கந்தன் கருணை யார் பக்கம்
கந்தன் கருணை யார் பக்கம்
கவிய நாயகர்கள் எங்கள் தோழர்களுக்காக
கண்ணீர்வடித்து நெஞ்சம் சுமக்கும் சுமையுடன்
புரட்சிவேட்கை தோழமையுடன் ---பாவரசன்-------
Keine Kommentare:
Kommentar veröffentlichen