தோழர் நாபாவே எங்கள் அருகே நீங்கள் இருந்திருந்தால்......
நல்லொதொரு தீர்வு கிடைத்திருக்கும்
நற்பெயர் பெற்ற எங்கள் தோழனை
நண்பன் ஒருவன் உங்கள் அருகில் இருந்து
நயவஞ்சகம் செய்தானோ தோழா!!!
நன்றி கெட்ட செயல் அல்லவா
நம் மக்கள் உங்களை மறக்கவில்லை
நடைபயிலும் குழந்தைக்கும் உண்மையில்
நடந்த சம்பவம்கூறப்படும் தோழா!!!
நன்நடத்தையில் நீங்கள் பெற்ற
நல்லதொரு காவியம் நீங்கள்
நம்பியிருந்த கட்டைவிரல் (பாசிச தலைவன்)
நம்கண்ணில் குத்தினரோ தோழா!!!
நகம் தவறுதலாக தாக்கினால் தாங்கலாம்
நம்பியிருந்த நண்பன் முதுகிலே தாக்கினால்
நம்ப முடியவில்லை -நீங்கள் என்றும்
நம்பக்கதிலிருப்பது போல ஓர் உணர்வு தோழா!!!
நத்தைகளையும் புல்லுருவிகளையும்
நடைதனில் நோக்கி விடலாம்
நடைபிணங்களாக அலையும் பாசிசங்கள்
நகர்ந்து சென்றதை காணவில்லையா தோழா!!!
நரை தலையில் விழுந்தாலும் கொள்கையில்
நற் கொள்கையில் நாம் தடம்புரளவில்லை
நடாத்தி புறப்படுவோம் செயல்படுவோம்
நம்பிக்கையெனும் விவேகத்துடன் தோழா!!!
நாவிற்கினிய அரசியலை தோழர்களுக்கு
நலம்பெறவே தந்தவர் நீங்கள்
நல்லதொரு எதிரிகாலம் என்றும்
நாம் அமைப்போம் உங்கள் ஆசியுடன் தோழா..!!!
புரட்சிவேட்கை...தோழமையுடன் ----பாவரசன்---