Donnerstag, 11. Februar 2010

ஊரெங்கும் தேடினேன்!!! ஒருவரைக் கண்டேன் அந்தஒருவரிடம் தேடினேன்!!! பொது நலத்தைக் கண்டேன்..


காங்கேசன் மண்ணிலே
கருவான எம்தோழர்
கண்மணிகளாம் மக்களின்
கதிர்வீச்சின் தியாகியாய்
களமிறங்கிய தோழரின்
களங்கமில்லாத பயணம்
காலில் இடர்பட்ட தடைகளை
கடந்து சென்ற வேகம்
கண்ணீர் வரவைக்கும் என்றும்..
கரை நோக்கிய விடியல் தாங்கி -நற்
கதைகள் பலசிந்தையில் சுமந்து
கவலைகளை காலில் மிதித்து
கடமைதனில் நோட்டமிட்டு
கர்மவீரனாக வலம் வந்து
காலத்தின் சுற்ரோட்டம் தனை அறிந்து
கர்வம் ஏதும் இல்லாது
கதிரவன்போல் நல்ஒளி தந்தாய்..
கண்ணிவைத்த நரிகளை
கணப்பொழுதில் மன்னித்தாய்
கரி கொண்டு வர்ணம் தீட்ட
கங்கனம் கொண்டோரை
கண்கொடுத்து பாராமல் நெடுங்
கடல் தனை தாண்டிச் சென்றாய்
களிப்படைந்த தோழர்கள் உங்களால்
கறையேதும் இல்லாமல்
களைப்பு ஏதும் இல்லாமல்
கரையேறி விளையாடினர் வீரக்களம்
கனிவான மொழிதந்து எங்களை
காப்பாற்றி கலியுக சுயநலவாதிகளிடம்
கபடமில்லா யுத்தமொன்றை
கண்ணெதிரே எதிர்கொள்கின்றோம்
கண்ணியவாளன் நம்தோழனை
கறை படிந்த பாசிசவாதி ஓருவன்
காரணங்கள் இன்றி கசக்கி எறிந்தானே..
கரம்தனை தோழில் போட்ட நண்பனே
கல்லறைக்கு அனுப்பினானே
கட்டுப்படவில்லை எமது நெஞ்சம்
கயவனவன் நம் கண்முன்னே
கவர்ந்து சென்றானோ தோழனை
காத்திருக்கிறோம் என்றென்றும்
களங்கமில்லா உங்கள் முகம்காண
கண்ணீர் விழிகளுடன் காத்திருக்கின்றோம்
காலம் தாழ்த்தாது விரைந்து வாருங்கள் தோழா!!!
புரட்சிவேட்கை...தோழமையுடன் ----பாவரசன்---

Keine Kommentare:

Kommentar veröffentlichen