Donnerstag, 11. Februar 2010

உன்னதமான தோழன் எங்கள் க.பத்மநாபா........

பத்மநாபாவெனும் பல்கலைக்கழகம் தனில்
பக்குவமாக அரசியல்கற்ற தோழர்கள் நாங்கள்
பார்போற்றும் ஆசானின் மடியில் அமர்ந்திருந்து
பண்பான போதனைகளை செவிமடுத்த தோழர்கள் நாங்கள்

பாசறைதனில் மாசற்ற முகமலர்ச்சி கண்டு

பண்பாளனாக நேசித்த தோழர்கள் நாங்கள்
பகைவன் யாரேனும் அனிதியாக பறைசாற்ற நினைத்தலும்
பண்ணாளனாக மாறும் நல்உள்ளம் கொண்டவரை
பரிவின் சுவாசத்தின் அதிர்வை உணர்ந்த தோழர்கள் நாங்கள்

பணிகளை துணிகரமாக செயல்படுத்திய வீமனை அன்று
பரிந்துரைப்பு இல்லாம் நோக்கிய தோழர்கள் நாங்கள்
பாமரமக்களும் உற்று பார்த்த பரந்தாமனை கண்டு
பக்கம் பக்கமாய் புகழ்ந்ததை பார்த்த தோழர்கள் நாங்கள்

பாவிகளை தன்பக்கத்திலிருந்தாலும் எங்கள் செயளாலர்
பகுத்தறிவு ஊட்டிச்சென்றதை கண்டுகழித்த தோழர்கள்
பாரினில் இவரை போற சொல்லின் செல்வரை நாம்
பார்த்தில்லை எனஇறுமாப்பு கொண்ட தோழர்கள் நாங்கள்
பாரதத்தின் காந்தியை நாங்கள் கண்டதில்லைதோழா
பாசமிக்க உங்களை மாகாத்மாவாக காண்கின்றோம்
பாசிசம் சுமந்த ஓருவன் பச்சை மாமிசம் உண்ணும் கழுகுக்கு
பலகாலம் வாழவேண்டிய உங்களை பறிகொடுத்து
பாதை அறியாமல் தடுமாறும் தோழர்கள் நாங்கள்

பாவிகள் இப்போ பாரினில் இல்லை தோழா
பாதை தொடர்ந்து செல்வோம் பண்பாளனே
பயணங்கள் இடரின்றி வகுத்து
பாதையினிலே காத்திருக்கும் தோழர்கள் நாங்கள்
புரட்சிவேட்கை...தோழமையுடன் ----பாவரசன்---

Keine Kommentare:

Kommentar veröffentlichen